மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதை சமாளிக்க மாநில அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்ற அனைத்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் மம்தா பங்கேற்றார். இதுதொடர்பாக பின்னர் மேற்கு வங்க அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அடுத்தடுத்து வரவிருக்கும் பண்டிகைகளால் கொரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புகள் இருப்பதை அரசு உணர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், கொரோனாவை சமாளிக்க அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாகவும் பிரதமர் உடனான கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இனி ரூ.500 அபராதம்: அரசாணை வெளியீடு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3zV5uTo
No comments:
Post a Comment