டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை கடந்த 15 நாட்களில் ஆயிரத்திலிருந்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தலைநகரில், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை வெறும் 800 என்ற அளவில் இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 23 ஆயிரத்து 997 எனும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக தெற்கு டெல்லியில் 8 ஆயிரத்து 393 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன. வடக்கு டெல்லியில் 4 ஆயிரத்து 109, மத்திய டெல்லியில் 3 ஆயிரத்து 493, புதுடெல்லியில் 2 ஆயிரத்து 354 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
கட்டுப்படுத்தப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருப்பதாக டெல்லி மருத்துவத்துறை கூறியுள்ளது.
இதையும் படிக்க: ’ஒமைக்ரானை சாதாரணமாக நினைக்க வேண்டாம்’- மத்திய சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3noMKGQ
No comments:
Post a Comment