அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ள சர்வதேச கொரோனா 2-வது மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதல் சர்வதேச கொரோனா மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் சூழலில், 2-வது மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேச உள்ளார். இதில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். கொரோனாவால் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சரிவுகள் குறித்து கூட்டத்தில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/xE8GdWg
No comments:
Post a Comment