Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 28, 2022

கேரளாவில் முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கேரளாவிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள தலைமைச் செயலாளர் வி.பி. ஜாய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவின் தாக்கத்தால் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கிக்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் நோய் தொற்று அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டு பொது இடம், பணியிடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளார். முகக்கவசம் அணியாதோர் மீது பேரிடம் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே முகக்கவசம் கட்டாயமக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதையும் படிக்க: சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்
http://dlvr.it/SPPFbR

No comments:

Post a Comment

Pages