
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,077 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 67,084 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தையொட்டி பதிவாகியுள்ளது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,50,407 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 4,13,31,158 என்றாகியுள்ளது. மேலும் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 6,97,802 என குறைந்துள்ளது. இது நேற்றைவிட 92,987 குறைவாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் 14,91,678 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அதில் 58 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் தினசரி கொரோனா உறுதியாவோரின் எண்ணிக்கை விகிதம், 3.89% என்றாகியுள்ளது. சிகிச்சையிலிருப்போர் விகிதம், 1.64% என்றுள்ளது.
கொரோனா உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 657 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 1,241 பேர் உயிரிழந்த நிலையில் இன்று அது சரிபாதியாக குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,07,177 என்று உயர்ந்துள்ளது. கொரோனா உறுதிசெய்யப்படுவோர் விகிதம் லட்சங்களிலிருந்து ஆயிரமாக குறைந்திருப்பதை போலவே, இறப்பும் சரிபாதியாக குறைந்திருப்பது ஆறுதலளிக்கும் விஷயமாக உள்ளது.
India reports 58,077 fresh #COVID19 cases, 1,50,407 recoveries and 657 deaths in the last 24 hours.
— ANI (@ANI) February 11, 2022
Active cases: 6,97,802 (1.64%)
Death toll: 5,07,177
Daily positivity rate: 3.89%
Total vaccination: 1,71,79,51,432 pic.twitter.com/A7TQYl7hKF
கடந்த 24 மணி நேரத்தில் 48,18,867 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை இந்தியாவில் 171.79 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அந்தவகையில் இதுவரை இந்தியாவில் 1,71,79,51,432 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்தி: ஆந்திரா: நகராட்சி ஆணையர் மீது மை ஊற்றிய பெண்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/UiY2zIC
No comments:
Post a Comment