
கொரோனா நிலவரத்தைப் பொருத்து கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் நீக்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் பெரும்பாலான மாநிலங்களில் குறைவாக உள்ளனர்.

இதையடுத்து, உள்ளூர் நிலைக்கு ஏற்ப, சமூக, விளையாட்டு, மத, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் நீக்கி விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்வி, திருவிழா தொடர்பான கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவெடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/EhTAyag
No comments:
Post a Comment