Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, February 1, 2022

மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜிகே வாசன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போதைக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் அவர் அறிவித்துள்ளார்.



இதுதொடர்பாக தன் சமூகவலைதளபக்கத்தில் நேற்று பதிவிட்ட அவர், அதில் ”உடல்நலக்குறைவால் இன்று (நேற்று) சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். முடிவில் எனக்கு கொரோனோ நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி நோய்த்தொற்று குணமாகும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்தி: காஞ்சிபுரம்: கார் சீட்டின் அடியில் வைத்து 22 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/1O3cJIu0l

No comments:

Post a Comment

Pages