இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83,876 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், ஒரு மாதத்திற்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி உச்சத்தை எட்டியது. தற்போது படிப்படியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, இன்று ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதிக்குப் பிறகு, தற்போது தான் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,07,474 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 83,876 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு 4,21,88,138 -லிருந்து 4,22,72,014 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு விகிதம் 7.25 சதவீதமாக உள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 96.19 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 895 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று 865 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 895 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,01,979 -லிருந்து 5,02,874 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,08,938 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,99,054 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,04,61,148-லிருந்து 4,06,60,202 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 169.63 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,70,053 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
http://dlvr.it/SJm9Jd
Post Top Ad
Your Ad Spot
Thursday, February 10, 2022
Home
Unlabelled
ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு - ஒரே நாளில் 895 பேர் உயிரிழப்பு
ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு - ஒரே நாளில் 895 பேர் உயிரிழப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment