Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 17, 2022

இந்தியாவில் 26,000-க்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 25,920 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 30,757 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் அது இன்று குறைந்துள்ளது. இது நேற்றைவிட 4,837 குறைவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 66,254 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,19,77,238 என அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.12% என்றுள்ளது. இது நேற்றைவிட 0.9 சதவிகிதம் அதிகமாகும்.

image

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,92,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையிலிருப்போர் விகிதம், 0.68% என்றுள்ளது. இந்த விகிதம், நேற்றை விட 0.1% குறைவு. கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 492 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக நேற்றைய தினம் 541 பேர் என்றிருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, இன்று சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,10,905 என அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம், 1.19% என்றுள்ளது. அதேநேரத்தில் நாடு முழுவதும் இதுவரை 174.64 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் கடந்த 24 மணி நேரத்தில் 37.86 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,54,893 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 25,920 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா உறுதிசெய்யப்படுவோர் விகிதம் 2.07 சதவிகிதமாக உள்ளது. நேற்று இந்த விகிதம் 2.61 என்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்தி: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/sSjPOT9

No comments:

Post a Comment

Pages