Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 14, 2022

தமிழகத்தில் 2,000-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக முழு விபரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட மொத்தம் 1,632 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், 1,634- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது. 
image
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,365 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 95 ஆயிரத்து 750 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் 341 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/T74f8h6

No comments:

Post a Comment

Pages