Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, February 1, 2022

நேற்று 19,280; இன்று 16,096 பேருக்கு தொற்று உறுதி-தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சரிவு

தமிழகத்தில் ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இதன்பின்னர் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 19,280 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில், இன்று 1,22,120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 16,096 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சையில் இருந்து இன்று 25,592 பேர் குணமாகியுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,88,599 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 33,61,316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், இதுவரை 37,599 பேர் உயிரிழந்துள்ளனர்.
http://dlvr.it/SJC71V

No comments:

Post a Comment

Pages