கொரோனா பாதிப்பிலிருந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குணமடைந்த நிலையில் தற்பொழுது அவருடைய மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சவ்ரவ் கங்குலி சில வாரங்களுக்கு முன்பு கொரொனா பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது மகள், அவருடைய மைத்துனர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் தற்பொழுது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கங்குலியின் தாத்தா மற்றும் தாயார் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணம் அடைந்திருந்தனர்.
இதையும் படிக்க: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/34cWo8y
No comments:
Post a Comment