தமிழகம் முழுவதும் இன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதை தொடர்ந்து, தமிழக கேரள பகுதியிலுள்ள தேனி மாவட்டத்தில் சபரிமலை பத்தர் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டு வருகிறது. மற்றபடி பேருந்துகள் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் நேற்று இரவு நேர தொடங்கப்பட்ட ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்காக தொடர்ந்து வருகின்றது. அந்தவகையில் தேனியிலும் ஊரடங்கை முன்னிட்டு நேற்று இரவு முதலே கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இரவிலிருந்து பேருந்துகள் மற்றும் வாகன இயக்கம் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், காலையில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவசியத் தேவைக்கான வாகனங்கள் மட்டும் ஆய்விற்கு பின் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றில் சபரிமலை வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கால் தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை சந்திப்பு, இடமால் தெரு, பகுதி அம்மன் கோவில் தெரு என பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள நகரின் பரபரப்பு நிறைந்த முக்கிய சாலைகள், கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. ஊரடங்கை அமல்படுத்துவதற்காக போலீசார் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக நாளை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3zDLpkn
No comments:
Post a Comment