கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
எவாரா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடங்களில் காண்பிக்கும் அவசியத்திலிருந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த மனு தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், ‘ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக தடுப்பூசியை செலுத்துமாறு மத்திய அரசாங்கமோ, மத்திய சுகாதார அமைச்சகமோ நிர்பந்திக்கவில்லை. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, மக்கள் நலன் கருதியே தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி பரவலாக விளம்பரங்கள் செய்யப்படுகிறது. பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளம் உள்பட பல்வேறு வழிமுறைகள் மூலம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. அதை செயல்படுத்த சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், யாருடைய விருப்பத்துக்கு மாறாகவும், தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது. அதேபோல், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி சான்றிதழை கையோடு எடுத்துச் செல்லுமாறு எவ்வித உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை” இவ்வாறு அதில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/33nyVBD
No comments:
Post a Comment