நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை நெருங்கி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேநேரத்தில் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளன. இதனால் தொற்று பரவல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூசூழலில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிதக்கு காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளார். அதில் தற்போதைய கொரோனா நிலவரம், தொற்று பரவல் தடுப்புக்காகவும் சிகிச்சைக்காகவும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தடுப்பூசி பணிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: சென்னையில் 10 மாத ஆண் குழந்தையை விற்ற தாய் உட்பட மூவர் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3rdnJzx
No comments:
Post a Comment