Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, January 6, 2022

சென்னையில் 6 மண்டலங்களில் மிக வேகமாக அதிகரித்துள்ள கொரோனா: புள்ளிவிவரம் சொல்லும் தகவல்

தமிழகத்தில் சென்னையில் ராயபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட 6 மண்டலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது சிகிச்சையில் இருப்பவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்த 6 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள்தான் என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 6 மண்டலங்களில் மட்டும் சுமார் 5,000 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 63% பேர் 6 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த டிசம்பர் 30ஆம் தேதியிலிருந்து ஒரு வாரத்தில் மட்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

image

குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் 5 மடங்காகவும், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் 4 மடங்காகவும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எண்ணிக்கை வழியாக இதை பார்க்கையில், தண்டையார்பேட்டையில் கடந்த 30ஆம் தேதி வரை 99 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது, 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதுவே ராயபுரத்தில் 162 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது. அண்ணாநகரில் 800க்கும் மேற்பட்டோர் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் தலா 900க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3ffB8S9

No comments:

Post a Comment

Pages