இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,68,063 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 69,959 பேர் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்துள்ளனர், மேலும் 277 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிசை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 8,21,446ஆக உள்ளது.
நேற்று 1,79,723 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 11,660 பேர் குறைந்து 1,68,063 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போதுவரை 4,461 பேர் ஓமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“முகக்கசவம் அணிவோம்; தனிமனித இடைவெளியை கடைபிடிப்போம்; கொரோனாவை ஒழிப்போம்”
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3JYUl8r
No comments:
Post a Comment